உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாநில அளவிலான கராத்தே போட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

மாநில அளவிலான கராத்தே போட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

புதுச்சேரி: 45வது மாநில அளவிலான கோஜீ காய் கராத்தே போட்டி நடத்துவது குறித்து, கோஜீ காய் கராத்தே பள்ளி சார்பில், சங்க நிர்வாகிகள் கூட்டம் ஜெயராம் ஓட்டலில் நடந்தது. புதுச்சேரி மூத்த கராத்தே நிபுணர் ஜோதிமணி தலைமை தாங்கினார். ஆசிய கராத்தே நடுவர் அழகப்பன், கோஜிரியூ கராத்தே சங்க பொதுச் செயலாளர் சுந்தரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மூத்த கராத்தே பயிற்சியாளர்கள் குமரன், வெங்கடாஜலபதி, பெருமாள் ராஜ், கண்ணன், ஜவகர், ராஜேஷ், ராமராஜ், மேரிகிளாரா, கெஜலட்சுமி, முத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் வரும் 9ம் தேதி அமரர் கோர்க்காடு வெங்கட்டரங்க ரெட்டியார் நினைவாக நடக்கும் 45வது மாநில கோஜீ காய் கராத்தே போட்டி சிறப்பாக நடத்துவது, காரத்தே பள்ளியின் சிறப்பை வெளிப்படுத்தும் வகையில், வருடந்தோறும் கராத்தே போட்டியினை சிறப்பாக நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை