புயல் நிவாரணம் இ.கம்யூ., கோரிக்கை
புதுச்சேரி: இந்திய கம்யூ., மாநில செயலாளர் சலீம் விடுத்துள்ள அறிக்கை: டிட்வா புயல் காரணமாக, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. தொடர் மழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் புகுந்து, வீ டுகள் சேதமடைந்தன. தொழிலாளர்களுக்கு வேலை இல்லா சூழல் ஏற் பட்டு உள்ளது. ஆயிரக்கணக்கான ஹெக்டர் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கி ன. ஆகையால், டிட்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உடனடியாக நிவாரணம் அளிக்க வேண்டும். அதில், விவசாயிகளுக்கு ஏக்கருக்கு, ரூ.25 ஆயிரம், சேதமடைந்த வீடுகளுக்கு 20 ஆயிரம், வேலை இழந்த தொழிலாளர்களுக்கு 5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், நிவாரண உதவிகளை காலம் தாழ்த்தாமல் அரசு உடனடியாக வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.