மேலும் செய்திகள்
விழிப்புணர்வு ஊர்வலம்
23-Jan-2025
புதுச்சேரி : புதுச்சேரி, சஞ்ஜீவிராயன்பேட்டை அரசு தொடக்கப் பள்ளியில் 2025-26ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது.ஊர்வலத்தை பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் கந்தன், கருணாகரன் ஆகியோர் துவக்கி வைத்தனர். தலைமை ஆசிரியை அலமேலு தலைமை தாங்கினார். ஊர்வலத்தில் பள்ளி மாணவர்கள் முக்கிய வீதிகள் வழியாக சென்று, கல்வியின் முக்கியத்துவம், அரசு பள்ளியின் சிறப்பம்சங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.ஏற்பாடுகளை ஆசிரியைகள் ரம்யா, அனிதா, பாலமுருகன், விஜயலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.
23-Jan-2025