மேலும் செய்திகள்
அரசு ஐ.டி.ஐ.,களில் மாணவர் நேரடி சேர்க்கை
23-Jun-2025
புதுச்சேரி : புதுச்சேரி ஐ.டி.ஐ.,யில் பல்வேறு தொழில் பயிற்சிகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடக்கிறது.அரசு ஆண்கள் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் அழகானந்தன் செய்திக்குறிப்பு:பல்வேறு தொழிற் பயிற்சி பிரிவுகளுக்கு வரும் 11ம் தேதி, வம்பாகீரப்பாளையம் அரசு பெண்கள் தொழிற் பயிற்சி நிலையத்தில் சேர்க்கைகான கலந்தாய்வு நடக்கிறது.மேட்டுப்பாளையம் அரசு ஆண்கள் தொழிற்பயிற்சி நிலையம், வம்பாகீரப்பாளையம் அரசு பெண்கள் தொழிற்பயிற்சி நிலையம், வில்லியனுார் அரசு தொழிற்பயிற்சி நிலையம், பாகூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம்.நெட்டப்பாக்கம் அரசு தொழிற்பயிற்சி நிலையம், மற்றும் அனைத்து தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள பல்வேறு தொழிற் பயிற்சி பிரிவுகளுக்கு, 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று விண்ணப்பித்தவர்களுக்கு மட்டும் கலந்தாய்வு நடக்கிறது.அன்றைய தினம், சிறப்பு பிரிவினருக்கும், 250 மதிப்பெண் மற்றும் அதற்கு மேல் பெற்றவர்களுக்கும் கலந்தாய்வு நடக்கிறது. மேலும், 8ம் வகுப்பில், தேர்ச்சி பெற்ற அல்லது 10ம் வகுப்பு தவறிய மாணவர்களுக்கான தொழிற் பிரிவுகளான, வெல்டர், ஒயர்மேன் உள்ளிட்ட பயிற்சி பிரிவுகளில் சேர்வதற்கான எழுத்து தேர்வு மற்றும் நுழைவு தேர்வு, மேட்டுப்பாளையம் அரசு ஆண்கள், தொழிற்பயிற்சி நிலையத்தில் வரும் 14ம் தேதி நடக்கிறது. மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடக்கிறது. மேலும், 9443958173, 9843856898 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
23-Jun-2025