மாணவர்களின் நுால் வெளியீட்டு விழா
பாகூர்: குருவிநத்தம் பாரதிதாசன் அரசு உயர்நிலைப் பள்ளியில், மாணவர்கள் உருவாக்கிய 'பட்டாம் பூச்சியின் படபடக்கும் சிறகுகள்' என்னும் நுால் வெளியீட்டு விழா நடந்தது. ஆசிரியை கோமளா வரவேற்றார். தலைமையாசிரியர் குமாரராசு தலைமை தாங்கினார். நல்லாசிரியர் வெற்றிவேல் முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள் சாமுண்டீஸ்வரி, இரிசப்பன், தேவி, நான்சி, திவ்யா, செந்தில் ஆகியோர் வாழ்த்தி பேசினர். அறிவியல் ஆசிரியை சங்கரதேவி நோக்கவுரையாற்றினார்.தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ரேவதி, குபேரன், சுகந்தி, அருளரசி,சிறப்பு ஆசிரியை அகிலாண்டேஸ்வரி ஆகியோர் பாராட்டி பேசினர். எட்டு மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் உருவாக்கிய, 'பட்டாம் பூச்சியின் படபடக்கும் சிறகுகள்'என்ற படைப்பு வண்ணப் படங்களுடன் தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு மும்மொழி நுாலாக வெளியிடப்பட்டது. சிறப்பு விருந்தினராக அமைதி மற்றும் பண்பாட்டு ஒருங்கிணைப்பு அமைப்பின் பொறுப்பாளர் அகஸ்டின் புரூடஸ் ஜெயக்குமார் கருத்துரையாற்றினார். உடற்கல்வி ஆசிரியர் கமலக்கண்ணன் நன்றி கூறினார்.