மேலும் செய்திகள்
பார்வையற்ற மாணவி தற்கொலை; விசாரணை கோரி போராட்டம்
11-Mar-2025
புதுச்சேரி : பெற்றோர் கண்டித்ததால், மன முடைந்த கல்லுாரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.திலாஸ்பேட்டையை சேர்ந்தவர் ஜெயகணேஷ், 47; தியேட்டரில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரது மகள் ஜெயஸ்ரீ, 17; முத்தியால்பேட்டையில் உள்ள அரசு கல்லுாரியில் படித்து வந்தார்.கடந்த சில நாட்களாக ஜெயஸ்ரீ, படிப்பில் கவனம் செலுத்தாமல் மொபைல் போனில் பேசி வந்ததால், அவரது பெற்றோர் கண்டித்தனர்.நேற்று முன்தினம் காலை ஜெயகணேஷ் வேலைக்கும், அவரது மனைவி, மற்றொரு மகளும் உறவினரின் வீட்டிற்கும் சென்றனர். பின் மாலை வந்து பார்த்தபோது, ஜெயஸ்ரீ வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.தகவலறிந்த டி.நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, இறந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
11-Mar-2025