உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தாகூர் அரசு கல்லுாரியில் மாணவர் கூட்டமைப்பு துவக்கம்

தாகூர் அரசு கல்லுாரியில் மாணவர் கூட்டமைப்பு துவக்கம்

புதுச்சேரி: தாகூர் அரசு கல்லுாரியில் ஆங்கிலத்துறை சார்பில், மாணவர்கள் கூட்டமைப்பு துவக்க விழா நடந்தது. ஆங்கிலத்துறை தலைவர் அஞ்சுநாயர் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் கருப்புசாமி தலைமை தாங்கினார். டாக்டர் நான்சி பிரேம்குமார் பங்கேற்று, மாணவர்களுக்கு பல்வேறு வழிகாட்டுதல் ஆலோசனைகள் வழங்கினார்.மாணவர் கூட்டமைப்பு தலைவராக சந்தோஷ் ஜான் கிருஸ்டோபர், துணைத் தலைவர்களாக தினேஷ், இளமாறன், செயலாளராக பிரகதி உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகள் முன்னிலையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர். கூட்டமைப்பு தலைவர் சந்தோஷ் ஜான் கிறிஸ்டோபர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை