உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாணவிகள் விடுதி வெள்ளி விழா 

மாணவிகள் விடுதி வெள்ளி விழா 

புதுச்சேரி: ஒதியம்பட்டு எய்ம் பார் சேவா மாணவிகள் விடுதியின் வெள்ளி விழா நடந்தது. சுவாமி தயானந்த சரஸ்வதி மூலம் 2000ம் ஆண்டு, கிராமப்புற குழந்தைகளுக்கு கல்வி மற்றும் சுகாதார வசதிகளை கிடைக்க செய்வது, திறன் மேம்பாடு மற்றும் தலைமைத்துவ குணங்களை வளர்ப்பதற்காக எய்ம் பார் சேவா நிறுவப்பட்டது. அதன்படி, வில்லியனுார் அடுத்த ஒதியம்பட்டில் அமைந்துள்ள எய்ம் பார் சேவா மாணவிகள் விடுதியின் வெள்ளி விழா நடந்தது. விழாவை முதல்வர் ரங்கசாமி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். தொடர்ந்து, குழந்தைகள் குறிக்கோளுடன் வாழ வேண்டும். அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு, அரசு அளித்து வரும் சலுகைகள் குறித்து விளக்கி கூறினார். விழாவில், விடுதி பொறுப்பாளர்கள், ஊழியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை