உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ஹயக்ரீவர் கோவிலில் மாணவர்கள் தரிசனம்

 ஹயக்ரீவர் கோவிலில் மாணவர்கள் தரிசனம்

புதுச்சேரி: கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து பள்ளிக்கு சென்றனர். புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிந்து, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. ஆர்வமுடன் மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர். இந்நிலையில், முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் லட்சுமி ஹயக்ரீவர் பெருமாள் கோவிலில் மாணவர்களுக்காக காலை சிறப்பு திருமஞ்சனம் மற்றும் தீபாராதனை நடந்தது. பள்ளிக்கு செல்லும் முன் அப்பகுதியில் உள்ள மாணவர்கள் பெற்றோர்களுடன் கோவிலிலுக்கு சென்று, சுவாமி தரிசனம் செய்தனர். பிறகு பள்ளிக்கு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை