உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / துணை சுகாதார நிலையம் பூமி பூஜை துவக்கிவைப்பு

துணை சுகாதார நிலையம் பூமி பூஜை துவக்கிவைப்பு

வில்லியனுார் : உறுவையாறு கிராமத்தில் துணை சுகாதார நிலையம் அமைப்பதற்கு வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கிவைத்தார். மங்கலம் தொகுதி உறுவையாறு கிராமத்தில் பொதுப்பணித்துறை சிறப்பு கட்டிடம் கோட்டம்-1 சார்பில் ரூ. 47 லட்சம் திட்ட மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம் அமைப்பதற்கு நேற்று பூமி பூஜை விழா நடந்தது. விழாவில் வேளாண்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை சிறப்பு கட்டிட கோட்டம்-1 செயற்பொறியாளர் கோபி, உதவி பொறியாளர் ராஜ்குமார், இளநிலை பொறியாளர் சண்முகம்,ஒப்பந்ததாரர் பன்னீர்செல்வம் மற்றும் என்.ஆர்.காங்.,பிரமுகர்கள், சுகாதார துறை அதிகாரிகள், ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை