உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் தயாரிக்கப்படும் நீர்முழ்கி படகு

புதுச்சேரியில் தயாரிக்கப்படும் நீர்முழ்கி படகு

புதுச்சேரி : புதுச்சேரியில் தனியார் நிறுவனம் மூலம் சிறிய நீர்மூழ்கி படகு தயாரிக்கப்பட்டு வெளி நாடுகளுக்கு அனுப்பி வருகின்றனர்.புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்த மத்திய அமைச்சகம் மூலம் கடல்வழி போக்குவரத்தை துவக்கியுள்ளது. அதனை தொடர்ந்து கடந்த 4ம் தேதி, விசாகப்பட்டினத்தில் இருந்து புதுச்சேரிக்கு சொகுசு கப்பல் மூலம் சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர். இந்நிலையில், உப்பளம் பழைய துறைமுகம் அருகில் பி.என்.டி., மரைன் கிராப்ட் நிறுவனம் சிறிய நீர்முழ்கி படகுகளை தயாரித்து வெளிநாடுகளுக்கு வழங்கி வருகிறது. இது குறித்து, அந்நிறுவனத்தின் ஊழியர் பிரதாப் கூறுகையில், சுற்றுலாத்துறை பயன்பாட்டிற்காக, சிறிய அளவில் நீர்முழ்கி படகை தயாரித்து. புதுச்சேரி சுற்றுலாத்துறை மற்றும் அந்தமான், மாலத்தீவு, லட்சதீவு, இத்தாலி போன்ற வெளி நாடுகளுக்கு அனுப்பி வருகிறோம். இந்த படகில் 16 முதல் 20 பேர் வரை செல்லலாம். கடலில், இருக்கும் மீன்கள், பவளப்பாறைகள், கடற்பாசி உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்களை பார்ப்பதற்கு, ஆராய்ச்சி செய்வதற்கு இந்த நீர்முழ்கி படகு சுற்றலாத்துறைக்கு பயன் உள்ளதாக இருக்கிறது. இந்த படகை தயாரிக்க 60 லட்சத்தில் இருந்து 70 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை