உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,கள் திடீர் மாற்றம்

இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,கள் திடீர் மாற்றம்

புதுச்சேரி : புதுச்சேரியில் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி இன்ஸ்பெக்டர்கள் மூர்த்தி சிக்மா நுண்ணறிவு பிரிவுக்கும், வரதராஜன் போதை பொருட்கள் தடுப்பு பிரிவு (வெளிநாட்டு பதிவகம் பிரிவு), செந்தில்குமார் சிக்மா செக்யூரிட்டி, ஆடலரசன் ஏனாம் போலீஸ் நிலையம், அனில்குமார் மாகி போலீஸ் நிலையம், சண்முகம் மாகி கடலோர போலீஸ் நிலையம், சண்முகம் புதுச்சேரி வெளிநாட்டு பதிவகம் பிரிவு, கார்த்திகேயன் உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.மேலும் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமாருக்கு கூடுதல் பொறுப்பாக போலீஸ் ஆப் போலீஸ் பிரிவும், சண்முகசுந்தரம் கூடுதல் பொறுப்பாக சட்ட பிரிவு, ரகுபதி கூடுதல் பொறுப்பாக தலைமை ஸ்டோர் பிரிவு வழங்கப்பட்டுள்ளது.

சப்-இன்ஸ்பெக்டர் இடமாற்றம்

இதேபோல் சப் இன்ஸ்பெக்டர்கள் குமரவேல் ஒதியஞ்சாலை, பிரபு பாகூர் போலீஸ் நிலையத்திற்கும், நந்தகுமார் போலீஸ் ஆப் போலீஸ் பிரிவுக்கும், கதிரேசன் திருபுவனை போலீஸ் நிலையத்திற்கும், பிரமோத் லஞ்ச ஒழிப்புத்துறை (வெளிநாட்டு பதிவகம் பிரிவு), முருகானந்தம் அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்திற்கும், புனிதராஜ் ஏனாம், ராஜன் ஒதியஞ்சாலை, குமரன் நிரவி, சுரேஷ் கோட்டுச்சேரி, செந்தில்குமார் நெடுங்காடு போலீஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.இதற்கான உத்தரவை போலீஸ் தலைமையக எஸ்.பி., சுபம் கோஷ் பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ