உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாணவர்கள் திடீர் மோதல்

மாணவர்கள் திடீர் மோதல்

திருபுவனை: கல்லுாரி மாணவர்கள் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. மதகடிப்பட்டு - மடுகரை சாலையில் பள்ளிநேலியனுார் சாலை சந்திப்பு அருகே 50க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவர்கள் நேற்று மாலை கும்பலாக நின்று பேசி கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் திடீரென மோதலாக மாறியது. சில மாணவர்களை சுற்றி வளைத்து மற்றவர்கள் தாக்கினர். உள்ளூர் இளைஞர்கள் சிலரும் வாகனங்களில் வந்து, மாணவர்களை தாக்கினர். தகவல் அறிந்த திருபுவனை போலீசார் விரைந்து வந்து, மோதலில் ஈடுபட்ட மாணவர்களை பிடிக்க முயன்றனர். இரண்டு மாணவர்களை பிடிக்க, மற்ற மாணவர்கள் இருசக்கர வாகனங்களில் தப்பிச் சென்றனர். பிடிபட்ட மாணவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் போலீசார் தீவிர ரோந் து பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி