உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முதலியார்பேட்டையில் ஆக்கிரமிப்பு அகற்றியதால் திடீர் பரபரப்பு

முதலியார்பேட்டையில் ஆக்கிரமிப்பு அகற்றியதால் திடீர் பரபரப்பு

புதுச்சேரி : முதலியார்பேட்டை ஆலை வீதியில் ஆக்கிரமிப்பு செய்த கடைகளை பொதுப்பணித்துறையினர் அதிரடியாக அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.முதலியார்பேட்டை தொகுதியில் பல்வேறு இடங்களில் மற்றும் சாலையோர பகுதியில் ஆக்கிரமிப்பால் வாகன நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். அதனை அடுத்து, தொகுதி எம்.எல்.ஏ., சம்பத் முயற்சியில், அதிரடியாக மரப்பாலம், தேங்காய்த்திட்டு, வேல்ராம்பட்டு, பெருமாள் கோவில் அருகில் உள்ள சாலை ஆகிய இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.அதேபோல் முதலியார்பேட்டை, ஆலை வீதியில் சாலையோரத்தில் ஆக்கிரமிப்பு கடைகளால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் பாதிப்பு ஏற்பட்டு வந்தது. அதையடுத்து, நேற்று பொதுப்பணித்துறை அதிகாரிகள், முதலியார்பேட்டை, ஆலை வீதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை ஜே.சி.பி., இயந்திரம் மூலம் அகற்றினர்.இதானல் பாதிக்கப்பட்ட சிலர் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். அவர்களிடம் முதலியார்பேட்டைபோலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பின் ஆக்கிரமிப்பை அகற்றினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை