உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திடீர் சூறாவளி காற்று: மின்கம்பங்கள் சேதம்

திடீர் சூறாவளி காற்று: மின்கம்பங்கள் சேதம்

ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணத்தில் திடீரென வீசிய சூறாவளியால் மின்கம்பங்கள் முறிந்து விழுந்து மின் விநியோகம் தடைபட்டது.ஸ்ரீமுஷ்ணத்தில் நேற்று மாலை 3:00 மணிக்கு திடீரென சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது. அப்போது,நகரில் சில இடங்களில் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர்கள் காற்றில் பறந்தது. திருக்குளம் அருகே உள்ள லஷ்மி நாராயணன் கோவில் அருகில் இருந்த மரம் வேருடன் சாய்ந்து, அருகில் இருந்த மின்கம்பி மீது விழுந்தது. இதனால், அருகில் இருந்த மின் கம்பம் முறிந்தது.மேலும் மசூதி தெரு, கீழ வீதி உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பின், மின் வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மின் கம்பங்கள் முறிந்து விழுந்த பகுதிகளை தவிர்த்து மற்ற பகுதிகளுக்கு மின் இணைப்பு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை