உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு

தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு

திருக்கனுார் ; திருக்கனுார் அடுத்த பி.எஸ்.பாளையம் பாரதிதாசன் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் போதை ஒழிப்பு, மன அழுத்தம் மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.பள்ளியின் துணை முதல்வர் சபாபதி தலைமை தாங்கினார். புதுச்சேரி அரசு மருத்துவமனை டாக்டர் அரவிந்தன் கலந்து கொண்டு, போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மனநல மருத்துவர் ராஜா மாணவர்களுக்கு மன அழுத்தம் மற்றும் தற்கொலை தடுப்பு குறித்து விளக்கம் அளித்தார்.ஏற்பாடுகளை திட்ட அலுவலர்கள் சார்லஸ் பால், நள்ளாம் கவுரி ஆகியோர் செய்திருந்தனர். விரிவுரையாளர்கள் கண்ணன், முருகையன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ