| ADDED : நவ 25, 2025 05:32 AM
திருபுவனை: கலிதீர்த்தாள்குப்பம் கருணாநிதி அரசு மேல்நிலைப் பள்ளியில் அரசின் நலவழித்துறை தேசிய மனநல திட்டத்தின் சார்பில், போதை ஒழிப்பு, மன அழுத்தம் மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி துணை முதல்வர் மாலதி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் அறிவழகி முன்னிலை வகித்தார். பொறுப்பாசிரியர் தமிழ்ச்செல்வி வரவேற்றார். மனநலத்தின் முக்கியத்துவம், மன அழுத்தம் மற்றும் போதைப் பொருட்கள் தடுப்பு குறித்து மன நல மருத்துவர் அரவிந்தன், தற்கொலை தடுப்பு குறித்து மனநல சமூக பணியாளர் ராஜா பேசினர். திருபுவனை ஆரம்ப சுகாதார நிலைய வளரிளம் பருவ ஆலோசகர் வெற்றிவேல், குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினருக்கான பாதுகாப்பு, குறித்து பேசினார். தேசிய காசநோய் மற்றும் புகையிலை ஒழிப்புத் திட்ட செய்தி, கல்வி, தகவல் தொடர்பு அதிகாரி மணிமாறன் போதை பொருள் மற்றும் காச நோயால் ஏற்படக்கூடிய பாதிப்புகள், அதில் இருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்து, விளக்கினார். உடற்கல்வி விரிவுரையாளர் அமல்ராஜ் ஜார்ஜ் சேவியர் நன்றி கூறினார்.