உள்ளூர் செய்திகள்

 தற்கொலை

பாகூர்: வழக்கறிஞர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பாகூர் அடுத்த குருவிநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் இளையபெருமாள், 71; வழக்கறிஞர். கடலுாரில் கோர்ட்டில் பணிபுரிந்து வந்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நீரிழிவு, ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சில ஆண்டிற்கு முன், இருதய அறுவை சிகிச்சையும் செய்து கொண்டார். அதன்பின், வழக்கம் போல், கோர்டிற்கு சென்று வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மனஉளைச்சலுக்கு ஆளாகி வீட்டில் இருந்த படி ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை