உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சூப்பர் ஸ்பெஷாலிட்டி வார்டு திறப்பு விழா

சூப்பர் ஸ்பெஷாலிட்டி வார்டு திறப்பு விழா

வில்லியனுார் : அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி வார்டை கல்லுாரி சேர்மன் திறந்து வைத்தார்.அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரி வளாகத்தில் புதிதாக எட்டு மாடிகளை கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டியுள்ளனர். இதில் குளிர்சாதனம் செய்யப்பட்ட சூட் அறைகளுடன் பல்வேறு மருத்துவப் பிரிவுகள், பார்மசிகள், ரத்தம் மற்றும்பரிசோதனை கூடங்கள் உள்ளிட்டவைஅமைத்துள்ளன.சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டட திறப்பு விழாவில் வெங்கடேஸ்வரா கல்வி குழுமத்தின் சேர்மன் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிர்வாகி ராதா ராமச்சந்திரன், கல்வி குழுமத்தின் முதன்மை இயக்க அதிகாரி வித்யா, கல்லுாரி இயக்குனர் ரத்தினசாமி, மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜோசப் ராஜ், துணை கண்காணிப்பாளர்கள் சுரேஷ்,ராஜசேகர், பொது மேலாளர் சவுந்தராஜன் மற்றும் மருத்துவக் கல்லுாரி தலைமை பேராசிரியர்கள், துணை பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி