முடிதிருத்தும் உபகரணங்கள் வழங்கல்
வில்லியனுார் : மங்கலம் தொகுதி பயனாளிகளுக்கு முடிதிருத்தும் உபகரணங்களை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் வழங்கினார். புதுச்சேரி அரசு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை சார்பில், மங்கலம் தொகுதியை சேர்ந்த பயனாளிகளுக்கு முடி திருத்தும் உபகரணங்களை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் வழங்கினார். இந்நிகழ்ச்சி யில் மங்கலம் தொகுதி என்.ஆர்.காங்., பிரமுகர்கள் அர்ஜூனன், நிரஞ்சல்குமார், பலராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.