அரிசி, சர்க்கரை வழங்கல்
அரியாங்குப்பம்: தானம்பாளையத்தில், இலவச அரிசி, சர்க்கரையை சபாநாயகர் பொதுமக்களுக்கு வழங்கினார்.தீபாவளி பண்டிகைக்கு, இலவசமாக, 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரை, பொது மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியை, முதல்வர் ரங்கசாமி மேட்டுப்பாளையத்தில் துவங்கி வைத்தார். அதனை தொடர்ந்து, புதுச்சேரியில், ரேஷன் கடைகள் மூலம், அரிசி, சர்க்கரை வழங்கப்பட்டு வருகிறது. அதையடுத்து, தவளக்குப்பம் அடுத்த தானம்பாளையம் ரேஷன் கடையில், தீபாவளி இலவச அரிசி, சர்க்கரை வழங்கும் நிகழ்ச்சியை, சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார். ரேஷன் கடை ஊழியர்கள், பா.ஜ., பிரமுகர்கள் பங்கேற்றனர்.