உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பட்டாபிராமர் கோவிலில் சுவாதி நட்சத்திர வழிபாடு

பட்டாபிராமர் கோவிலில் சுவாதி நட்சத்திர வழிபாடு

பாகூர் : மதிக்கிருஷ்ணாபுரம் பட்டாபிராமர் கோவிலில், சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு லட்சுமி நரசிம்மர் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.புதுச்சேரி - கடலுார் சாலை மதிக்கிருஷ்ணாபுரம் கிராமத்தில் பழமை வாய்ந்த பட்டாபிராமர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு லட்சுமி நரசிம்மர் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.காலை 9.00 மணிக்கு லட்சுமி நரசிம்மர் மற்றும் சக்கரத்து ஆழ்வாருக்கு, பால், தயிர், தேன், சந்தனம், இளநீர் உள்ளிட்டவற்றால் சிறப்பு திருமஞ்சனம் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி சின்னசாமி மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ