மேலும் செய்திகள்
கோதை நாச்சியார் திருக்கல்யாண உற்சவம்
14-Jan-2025
புதுச்சேரி: முத்தியால்பேட்டை காந்தி வீதியில் தென்கலை சீனிவாச பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 25ம் தேதி துவங்கியது. தினமும் காலை 10:00 மணிக்கு சிறப்பு ஹோமம், திருமஞ்சனம் இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்து வந்தது. கடந்த 3ம் தேதி காலை 6:00 மணிக்கு தேர் வீதியுலா மற்றும் தீர்த்தவாரி நடந்தது. 5ம் தேதி மாலை 6:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாள் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு சுவாமிக்கு விடையாற்றி ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
14-Jan-2025