உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தேக்வாண்டோ போட்டி: பரிசளிப்பு விழா

தேக்வாண்டோ போட்டி: பரிசளிப்பு விழா

புதுச்சேரி: புதுச்சேரியில் அகில இந்திய அளவிலான கராத்தே தேக்வாண்டோ போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.புதுச்சேரி கராத்தே மற்றும் தேக்வாண்டோ சங்கம் சார்பில் அகில இந்திய அளவில் பள்ளி மாணவர்களுக்கான கராத்தே தேக்வாண்டோ போட்டி, லாஸ்பேட்டை பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இதன் பரிசளிப்பு விழா நேற்று நடந்தது. கராத்தே சங்க தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார்.விளையாட்டு வீரர் நலச்சங்க சேர்மன் ஆளவந்தார்,தேக்வாண்டோ சங்க காரைக்கால்பொதுச்செயலாளர் பாண்டியன், துணை தலைவர் மோகன் முன்னிலை வகித்தனர்.போட்டி நடுவர்களாக மனோ, அபிலாஷ், கிருஷ்ணகுமார், ராகுல், சஞ்சய், சந்தோஷ்குமார், ஜெகதீஷ், விமல் செயல்பட்டனர். ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை தின்டிவனம் சாணக்கியா மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பெற்றனர். சப்ஜூனியர் பிரிவில் கடலுார் மாவட்ட சி.கே. பள்ளி மாணவர்கள் பெற்றனர்.வெற்றி பெற்ற வீரர்களுக்கு இந்திய விளையாட்டு ஆணைய புதுச்சேரி இயக்குநர் ராஜேஷ், ஹோலி பிளவர் அறக்கட்டளை சேர்மன் வெங்கடேசன், வழக்கறிஞர் சசிபாலன் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.விளையாட்டு வீரர் நல சங்க கவுரவ தலைவர் திருவேங்கடம், வழக்கறிஞர் விஜயக்குமார், எட்வின் ராஜ்ஐசக் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை