உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தமிழர் பொருளாதார மாநாடு அமைச்சருக்கு அழைப்பு

தமிழர் பொருளாதார மாநாடு அமைச்சருக்கு அழைப்பு

புதுச்சேரி: மலேசியாவில் நடக்கும் உலக தமிழர் பொருளாதார மாநாட்டில் பங்கேற்க அமைச்சர் நமச்சிவாயத்திற்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது. மலேசியா நாட்டின் கோலாலம்பூரில் 11வது உலக தமிழர் பொருளாதார மாநாடு வரும் நவம்பர் 15, 16, 17 ஆகிய தேதிகளில் நடக்கிறது.இந்த, தமிழர் பொருளாதார மாநாட்டில் புதுச்சேரி அரசு சார்பில் பங்கேற்க, மெட்ராஸ் டெவலப்மெண்ட் சொசைட்டி தலைவர் சம்பத் தலைமையில் நிர்வாகிகள், அமைச்சர் நமச்சிவாயத்தை நேற்று சட்டசபை வளாகத்தில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கி, வருகை தருமாறு கேட்டுக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை