மேலும் செய்திகள்
கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது
25-Nov-2026
புதுச்சேரி: புதுச்சேரியில் பைக் திருடிய தமிழக ஆசாமியை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி - தமிழக எல்லையான கோரிமேடு பகுதியில் டி நகர் இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப் இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையிலான போலீசார் இன்று (நவ.,27) காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். சந்தேகத்திற்குரிய வகையில் ராயல் என்பீல்டு பைக்கில் வந்த நபரை நிறுத்த முயன்ற போது, அவர் தப்பிக்க முயன்றார். அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர், சென்னை, மதுரவாயல் லட்சுமி நகரை சேர்ந்த வினோத் (எ) வினோத்குமார்,41; என்பதும் கடந்த ஜூலை 12ம் தேதி இரவு ஞானபிரசாகம் நகரில் உள்ள மேன்ஷனில் பார்க்கிங்கில் இருந்த பைக்கை திருடியதும் தெரியவந்தது. வினோத் மதுரவாயல் போலீஸ் ஸ்டேஷன் சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்பதும், அவர் மீது 2 கொலை வழக்குகள், 3 வழிப்பறி மற்றும் ஒரு கொலை முயற்சி வழக்கு நிலுவையில் இருப்பது தெரியவந்தது. அவரை டி நகர் போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள பைக் மற்றும் மொபைல்போனை பறிமுதல் செய்தனர்.
25-Nov-2026