உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தமிழ் காப்புக் கருத்தரங்கம்

தமிழ் காப்புக் கருத்தரங்கம்

பாகூர் : புதுச்சேரி நலப்பணிச் சங்கம் சார்பில், தமிழ் காப்புக் கருத்தரங்கம் சோரியாங்குப்பம் முத்தமிழ் கூடல் இல்லத்தில் நடந்தது.கருத்தரங்கிற்கு, சங்க தலைவர் நல்லாசிரியர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். துணைச் செயலர் முனியன் வரவேற்றார். ஆலோசகர் முத்து அய்யாசாமி முன்னிலை வகித்தார். சுரங்கத் துறை பொறியாளர் செல்வராஜ் பாராட்டி பேசினார்.தமிழ் மாமணி வேல்முருகன், தமிழ் மொழியின் மேன்மை குறித்து கருத்துரையாற்றினார். சிறப்பு விருந்தினராக துணை சபாநாயகர் ராஜவேலு பங்கேற்று, கருத்தரங்கில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பேசினார். ஏற்பாடுகளை பவித்ரா, கிஷோர்குமார் உள்ளிட்ட மாணவர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி