உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தமிழ் மரபு உணவுத் திருவிழா

தமிழ் மரபு உணவுத் திருவிழா

புதுச்சேரி: பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியில், தமிழ்த்துறை மற்றும் கல்லுாரி தர உறுதியளிப்பு குழு சார்பில், தமிழ் மரபு உணவுத் திருவிழா 2025 நடந்தது.விழாவிற்கு, கல்லுாரி முதல்வர் வீரமோகன் தலைமை தாங்கி, தமிழ் மரபு உணவுக் கண்காட்சியை துவக்கி வைத்து பேசினார். அதில், சிறு தானிய உணவுகளை நாம் உட்கொள்ளும்போது, அவை குளுக்கோஸ் என்ற சர்க்கரையை மெதுவாக வெளியிடுகின்றன. இதனால் உடலில் சர்க்கரையின் அளவு திடீரென அதிகரிப்பது தடுக்கப்படும்.செரிமானமும் மெதுவாக நடைபெறும் என்றார். ஒருங்கிணைப்பாளர் மணி வரவேற்றார். தமிழ்த்துறை தலைவர் சுரேஷ் கருத்துரை வழங்கினார். கவிஞர் சுஜாதா சரவணன், மரபு உணவுகளின் முக்கியத்துவம் குறித்து பேசினார். இதில், ஊன்துவை அரிசியில் (பிரியாணி), கருப்பு இட்லி, புதுச்சேரி மீன் குழம்பு, நாட்டுக்கோழிக் குழம்பு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பழந்தமிழ் உணவு வகைகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.மாணவிகள் விக்னேஸ்வரி, அருள்மொழி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். ஏற்பாடுகளை தமிழ்த்துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர். மாணவி புவனேஸ்வரி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை