உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உழவர்கரை நகராட்சியில் நாளை வரி வசூல் முகாம்

உழவர்கரை நகராட்சியில் நாளை வரி வசூல் முகாம்

புதுச்சேரி : உழவர்கரை நகராட்சியில் வரி வசூல் சிறப்பு முகாம், நாளை நடக்கிறது.நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் செய்திக்குறிப்பு:உழவர்கரை நகராட்சி சார்பில், வீட்டு வரி, சொத்து வரி, சேவை வரி மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்துவோரின் நலன் கருதி, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், 7வது குறுக்கு தெருவில் அமைந்துள்ள குடிநீர் நிலையத்தில் வரி வசூல் சிறப்பு முகாம், நாளை காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, அரும்பார்த்தபுரம், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் மற்றும் இதர வார்டுகளில் உள்ள நிலுவைதாரர்கள், 2023-24ம் ஆண்டு வரையிலான, காலத்திற்கு வரி செலுத்தலாம்.அதே சமயத்தில் இன்று மற்றும் நாளை ஆகிய இரு தினங்களில், வி.வி.பி., நகர் வீட்டு வரி வசூல் மையம், காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை இயங்கும். உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளில் உள்ள நிலுவைதாரர்கள், வரி செலுத்தி, வட்டி மற்றும் ஜப்தி நடவடிக்கையை தவிர்க்கலாம்.வீட்டு வரி, சொத்துவரி, மற்றும் சேவை வரி செலுத்துவோர் ஆன்லைன் மூலம், lgrams.py.gov.inஎன்ற இணையதள முகவரியிலும், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலமாகவும் செலுத்தலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை