உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது

வில்லியனுார்: சேதராப்பட்டு பகுதியில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சேதராப்பட்டு சப்இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் தொழில்பேட்டை பகுதியில் ரோந்து சென்றனர்.அப்போது தனியார் நிறுவனத்தில் வெளியில் நின்றிருந்த வாலிபர் போலீசாரை கண்டு தப்பியோட முயன்றார். அவரை, போலீசார் மடக்கி சோதனை செய்தனர். அவர், சிறிய கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். பின்னர் ஸ்டேஷன் கொண்டு சென்று தீவிர விசாரணை செய்ததில், அவர் விழுப்புரம் மாவட்டம், வானுார் தாலுகா இடையஞ்சாவடி கிராமத்தை சேர்ந்த மூர்த்திநாதன் மகன் மம்முட்டி (எ) வெங்கடேஷ், 21, என தெரியவந்தது.அவரை கைது செய்த போலீசார், 45 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்னர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை