உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மிஷினில் சிக்கி வாலிபர் கை முறிவு; தனியார் கம்பெனி மீது வழக்கு

மிஷினில் சிக்கி வாலிபர் கை முறிவு; தனியார் கம்பெனி மீது வழக்கு

புதுச்சேரி; தனியார் கம்பெனியில் மிஷினில் சிக்கி ஒடிசா வாலிபர் கை எலும்பு முறிவு ஏற்பட்டது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்தனர்.ஒடிசாவை சேர்ந்தவர் கிஷோர்குமார்பானி, 35; திருச்சிற்றம்பலம் கூட்ரோடில் குடும்பத்துடன் தங்கி, சேதராப்பட்டு தொழிற்பேட்டையில் உள்ள ஒரு கம்பெனியில், மெஷின் ஆப்ரேட்டராக வேலை செய்து வருகிறார்.இவர், நேற்று முன்தினம் காலை கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தபோது, அவரது வலது கை மெஷினில் சிக்கி, எலும்பு முறிவு ஏற்பட்டது. சக ஊழியர்கள், கிஷோர்குமார் பானியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் அளித்த புகாரின் பேரில், பாதுகாப்பற்ற முறையில் வேலை வாங்கிய தனியார் நிறுவனம் மீது, சேதராப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ