உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  தெலுங்கானா தொழிலாளி சாவு

 தெலுங்கானா தொழிலாளி சாவு

புதுச்சேரி: தெலுங்கானாவை சேர்ந்தவர் வெங்கடய்யா, 40. இவர், அதே மாநிலத்தை சேர்ந்த குன்ன வெங்கடேஷிடம் புதுச்சேரியில், ஒப்பந்த அடிப்படையில், வேலை செய்து வந்தார். வெங்கடய்யாவுக்கு, உடல்நிலை சரியில்லாததால், அவரை, தெலுங்கானாவுக்கு அனுப்பி வைக்க, குன்ன வெங்கடேஷ் தனது பைக்கில் நேற்று முன்தினம் ரயில்வே ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றார். அப்போது, வெங்கடய்யாவுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து இறந்து விட்டதாக தெரிவித்தனர். உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை