உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரூ.3 லட்சத்தில் கோவில் குளம் துார் வாரப்படும் : ஜான்குமார்

ரூ.3 லட்சத்தில் கோவில் குளம் துார் வாரப்படும் : ஜான்குமார்

புதுச்சேரி: சாரம் சிவசுப்ரமணியர் கோவில் குளம் 3 லட்சம் ரூபாய் செலவில் துார்வாரப்பட உள்ளது என, அமைச்சர் ஜான்குமார் தெரிவித்தார். காமராஜ் நகர் தொகுதி, சாரம் சிவசுப்ரமணியர் கோவில் குளம் புதர்மண்டியுள்ளது. தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது. இந்த கோவில் குளத்தினை துார்வாரி சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினிடம் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை உடனடியாக ஏற்ற அவர், சிவசுப்ரமணியர் கோவில் குளத்தை துார்வாரப்படும் என, உறுதியளித்தார். இப்பணி அமைச்சர் ஜான்குமார் முன்னிலையில் துவங்க உள்ளது. இது குறித்து அமைச்சர் ஜான்குமார் கூறுகையில், 'பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, சிவசுப்ரமணியர் கோவில் குளத்தை துார்வாரி தண்ணீர் தேங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அறிவுறுத்தியுள்ளார். இக்கோவில் குளம் 3 லட்சம் ரூபாய் செலவில் துார்வாரப்பட உள்ளது. இரண்டு வாரத்திற்குள் குளம் துார் வரும் பணி முடிவடையும். இதேபோல், ரெயின்போ நகர் கிருஷ்ணா குளமும் 3 லட்சம் ரூபாய் செலவில் துார்வார ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அறிவுறுத்தலின்பேரில் துார்வாரப்பட உள்ளது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை