கோவில் திருப்பணி துவக்க விழா
புதுச்சேரி: உழந்தை கீரப்பாளையத்தில் கோவில் கட்டும் பணியை சம்பத் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.முதலியார்பேட்டை உழந்தை கீரப்பாளையத்தில் அமைந்துள்ள பொதுப்பிள்ளையார், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர் கோவில் ரூ. 2 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை நடந்தது.கோவில் தலைவரும், முதலியார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.,வுமான சம்பத் தலைமை தாங்கி திருப்பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி வெங்கடேஸ்வரன், கோவில் ஆலோசனை குழு உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள், பக்தர்கள், உபயதாரர்கள் கலந்து கொண்டனர்.