வாசகர்கள் கருத்துகள் ( 3 )
பேருந்து நிலையம் ஒட்டி அடுக்குமாடி வாகன நிறுத்தகம் அமைக்கலாம்
பேருந்து நிலையம் ஒட்டி அடுக்குமாடி வாகன நிறுத்தகம் அமைக்கலாம்.
பேருந்து நிலையம் ஒட்டி அடுக்குமாடி வாகன நிறுத்தகம் அமைக்கலாம்
புதுச்சேரி: புதிய பஸ் ஸ்டாண்டில் டெம்போ வாகனங்கள் நிறுத்த இடம் ஒதுக்கி தர கோரி டிரைவர்கள் சாலை மறியல் செய்தனர்.புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் கட்டப்பட்ட புதிய பஸ் ஸ்டாண்ட் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. அன்றைய தினம் நள்ளிரவு முதல் பஸ்கள் இயங்க துவங்கியது. ஏற்கனவே பஸ் ஸ்டாண்ட் முன்பகுதி யில் டெம்போ, ஆட்டோக் கள் நிறுத்தி பயணிகளை ஏற்றி வந்தனர்.இந்நிலையில் புதியதாக திறக்கப்பட்ட பஸ் ஸ்டாண்டில், ஏற்கனவே டெம்போ, ஆட்டோ நின்ற பகுதியை பயணிகள் நடந்து செல்லும் வழியாக மாற்றப்பட்டுள்ளது. டெம்போ, ஆட்டோக்கள் நிறுத்த இடம் ஒதுக்கி தரக் கோரி, டெம்போ டிரைவர்கள் நேற்று காலை 10:00 மணியளவில், பஸ் நிலையம் எதிரே மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் உருளையன்பேட்டை போலீசார், பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.
பேருந்து நிலையம் ஒட்டி அடுக்குமாடி வாகன நிறுத்தகம் அமைக்கலாம்
பேருந்து நிலையம் ஒட்டி அடுக்குமாடி வாகன நிறுத்தகம் அமைக்கலாம்.
பேருந்து நிலையம் ஒட்டி அடுக்குமாடி வாகன நிறுத்தகம் அமைக்கலாம்