உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஜவுளிக்கடை உரிமையாளர் மயங்கி விழுந்து பலி

ஜவுளிக்கடை உரிமையாளர் மயங்கி விழுந்து பலி

திருக்கனுார் : திருக்கனுாரில் ஜவுளிக்கடை உரிமையாளர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார். விழுப்புரம் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சபியுல்லா, 51; திருக்கனுார் அடுத்த சித்தலம்பட்டில் ஜவுளிக்கடை நடத்தி வந்தார்.நேற்று முன்தினம் இரவு கடையை மூடிவிட்டு, வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். திருக்கனுார் வணிகர் வீதி தனியார் மெடிக்கல் எதிரே திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் சபியுல்லாவை மீட்டு மண்ணாடிப்பட்டு சமுதாய நலவழி மையத்திற்கு அழைத்து சென்றனர்.பின்னர், மேல் சிகிச்சைக்காக ஜிப்மருக்கு கொண்டு செல்லப்பட்டார். டாக்டர் பரிசோதித்து அவர், இறந்துவிட்டதாக தெரிவித்தார்.இதுகுறித்து திருக்கனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ