படகு நிறுத்தும் இடம் உள்வாங்கியது
காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் 11மீனவ கிராமத்தை சேர்ந்த சுமார் 300க்கு மேற்பட்ட விசைப்படகு மூலம் தினம் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் தொழிலுக்கு செல்கின்றனர். இதனால் மீனவர்கள் தங்கள் விசைப்படகுகளை மீன்பிடித்துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வருகின்றனர். மேலும் இங்கு பிடிக்கப்படும் மீன்கள் பல்வேறு வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறன.இந்நிலையில் மீன்பிடித்துறைமுகத்தில் படகுகள் கட்டப்படும் மேல்தளம் திடீரென உள்வாங்கியதால் மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.தகவல் அறிந்த எம்.எல்.ஏ.,க்கள் நாஜிம், நாகதியாகராஜன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.பின்னர் மீன்பிடித்துறைமுகத்தை சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.இதுக்குறித்து மீனவர் கஜேந்திரன் கூறுகையில்., காரைக்கால் மீன்பிடித்துறைமுகம் கட்டி 12ஆண்டுகள் ஆகிய நிலையில் படகுகள் நிறுத்தப்பட்டுள்ள பகுதியில் தளம் உள்வாங்கியுள்ளது.இங்கு தினம் 20டன் மீன்கள் ஏற்றுமதி செய்யப்படுவதால், இப்பணிகள் பாதிக்கப்படுகிறது .புதுச்சேரி அரசு மீன்பிடித்துறைமுகத்தை தரம் உயர்த்த ரூ.35கோடி நிதி ஒதுக்கிய, நிலையில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை மேலும் இரண்டாம் கட்டபணிக்கு ரூ.125கோடிக்கு பூமிபூஜை துவங்கும் என மத்திய அமைச்சர் அறிவித்தும் எந்தப்பணியும் துவங்கவில்லை. எனவே மீனவர்கள் நலன்கருதி மீன்பிடித்துறைமுகத்தை தரமாக மேம்படுத்தவேண்டும். இல்லை என்றால் மீனவர்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.