மேலும் செய்திகள்
நாய் இறந்தது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு
29-Jan-2025
அரியாங்குப்பம்: அரியாங்குப்பத்தில் வாடகை வீட்டில் அழுகிய நிலையில் இறந்து கிடந்தவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.லாஸ்பேட்டை கருவடிக்குப்பத்தை சேர்ந்தவர் சீனுவாசன், 62; பி.இ., படித்துள்ள இவர், திருமணம் செய்து கொள்ளாமல், வீட்டை வீட்டு பிரிந்து, தனியாக வசித்து வந்தார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, வீராம்பட்டினம் சாலை பாரதி நகரில், வாடகை அறை எடுத்து தங்கியிருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, தனக்கு உடல் நிலை பாதித்துள்ளதாக, அவரது நண்பரிடம் மொபைல் போனில் கூறியுள்ளார்.இந்நிலையில், சென்னையிலிருந்த அவரது நண்பர் கணேசன், நேற்று வந்து பாரத்தபோது, அறையில் சீனுவாசன் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
29-Jan-2025