உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பஸ் நிலைய கட்டுமான பணியில் தொடர்பில்லை தி சென்னை சில்க்ஸ் நிறுவனம் விளக்கம்

பஸ் நிலைய கட்டுமான பணியில் தொடர்பில்லை தி சென்னை சில்க்ஸ் நிறுவனம் விளக்கம்

புதுச்சேரி : புதுச்சேரி பஸ் நிலையம் கட்டுமான பணியில் எந்த சம்பந்தமும் இல்லை என 'தி சென்னை சில்க்ஸ்' நிறுவனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து அந்நிறுவனம் விடுத்துள்ள விளக்கம் வருமாறு:புதுச்சேரி பஸ் நிலைய கட்டுமானப் பணியில் மெகா ஊழல் நடந்துள்ளதாக வெளி வந்துள்ள செய்தியில் புதுச்சேரி, கடலுார், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களின் நன் மதிப்பை பெற்ற 'தி சென்னை சில்க்ஸ்' நிறுவனத்தின் பெயர் குறிப்பிட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது. புதுச்சேரி பஸ் நிலைய கட்டுமான பணிக்கும், சென்னை சில்க்ஸ் நிறுவனத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மேலும் அந்த செய்தியில் குறிப்பிட்டு உள்ளது போன்று அமல்ராஜ் என்ற பெயர் கொண்ட நபர் எங்கள் நிறுவனத்தில் யாரும் இல்லை.இவ்வாறு 'தி சென்னை சில்க்ஸ்' நிறுவனம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி