உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இன்று 79வது சுதந்திர தின விழா முதல்வர் தேசிய கொடி ஏற்றுகிறார்

இன்று 79வது சுதந்திர தின விழா முதல்வர் தேசிய கொடி ஏற்றுகிறார்

புதுச்சேரி: புதுச்சேரி அரசு சார்பில், கடற்கரை சாலையில் இன்று காலை நடைபெறும் சுதந்தி ர தின விழாவில் முதல்வர் ரங்கசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து, சிறந்த போலீஸ் அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்குகிறார். நாட்டின் 79வது சுதந்திர தினவிழாவை இன்று புதுச்சேரி அரசு சார்பில், நான்கு பிராந்தியங்களிலும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காந்தி திடலில் நடைபெறும் விழாவில், காலை 9:05 மணிக்கு முதல்வர் ரங்கசாமியை, தலைமை செயலர் சரத் சவுகான் விழா மேடைக்கு அழைத்து செல்கிறார். அங்கு போலீஸ் பேண்டு வாத்தியக் குழுவினர் தேசியகீதம் இசைக்க, முதல்வர் ரங்கசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். பின், போலீஸ் அணிவகுப்பு மரியாதை ஏற்கிறார். தொடர்ந்து சுதந்திர தின விழா உரையாற்றுகிறார். பின், சிறப்பாக பணியாற்றிய போலீசார் மற்றும் பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கிய துறைகளுக்கு விருது, சமூக சேவகர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்குகிறார். தொடர்ந்து, மேடையில் இருந்தபடி போலீஸ், ஊர் காவல்படை, தீயணைப்பு துறை, முன்னாள் ராணுவ வீரர்கள், என்.சி.சி., - என்.எஸ்.எஸ்., சாரணர் மற்றும் பள்ளி மாணவர்களின் அணிவகுப்பை பார்வையிடுகிறார். தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. இதேபோன்று காரைக்காலில் நடைபெறும் விழாவில் அமைச்சர் திருமுருகன், ஏனாமில் அமைச்சர் லட்சுமிநாராயணன், மாகி யில் அமைச்சர் ஜான்குமார் ஆகியோர் தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ