உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெரிய வாய்க்காலில் கிரேன் விழுந்ததால் பரபரப்பு

பெரிய வாய்க்காலில் கிரேன் விழுந்ததால் பரபரப்பு

புதுச்சேரி: துார்வாரும் பணியில் ஈடுபட்ட கிரேன் மற்றும் துார்வாரும் இயந்திரம், பெரிய வாய்க்காலில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், பெரிய வாய்க்கால் துவங்கும் எஸ்.வி.பட்டேல் சாலை முதல் சோனாம்பாளையம் வரையிலான 3 கி.மீ., துாரம் வாய்க்காலின் இருபக்க தடுப்பு சுவரின் உயரத்தை அதிகரித்தல், 12 இடங்களில் கல்வெட்டு (சிறிய பாலம்) அமைத்தல், சோனாம்பாளையம் முதல் திப்ராயப்பேட்டை வரையிலான 1.5 கி.மீ., துாரத்திற்கு வாய்க்கால் சுவர் அதிகரித்தல், அரவிந்தர் ஆசிரமம் அருகில் சாலையில் வரிசையாக உள்ள கடைகளை அகற்றி, செஞ்சி சாலை பெண்கள் விடுதி அருகே கழிப்பறை வசதியுடன் கூடிய கடைகள் கட்டப்படுகிறது. அதற்காக, ரூ. 24 கோடியில் பெரிய வாய்க்கால் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது.இதில், வாய்க்கால் துார்வார புஸ்சி வீதி சந்திப்பு அருகே நேற்று காலை கிரேன் உதவியுடன், சிறிய இட்டாச்சி இயந்திரம் வாய்க்காலில் இறக்கப்பட்டது.அப்போது, கிரேன் சக்கரம் வாய்க்கால் பாலத்தின் நடைபாதைக்கு சென்றால் பாலத்தின் இறுதி பகுதி உடைந்து கிரேன் சாய்ந்ததுடன், இட்டாச்சி இயந்திரமும் வாய்க்காலில் விழுந்தது. இதில் கிரேன் ஆபரேட்டர் அதிஷ்டவசமாக காயமின்றி தப்பினர். கிரேன் விழுந்ததால் புஸ்சி வீதி சந்திப்பில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை