மேலும் செய்திகள்
இறந்தவர் யார் போலீசார் விசாரணை
30-Oct-2026
புதுச்சேரி: புதுச்சேரி, அண்ணா சாலையை சேர்ந்தவர் மதன்குமார், 42; கூலிதொழிலாளி. இவரது மனைவி கடந்த 2017ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக, தனது தாய் வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்றுவிட்டார். அவரது அண்ணன் வீட்டில் வசித்த வந்த மதன்குமார், கடந்த 10ம் தேதி நீடராஜப்பர் வீதி– சின்ன சுப்பராய பிள்ளை வீதி சந்திப்பில் குடிபோதையில் மயங்கி கிடந்தார். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
30-Oct-2026