அரசு நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 22ம் தேதி இறுதி கட்ட கலந்தாய்வு
புதுச்சேரி : அரசு நிர்வாக ஒதுக்கீட்டில் காலியாக உள்ள இடங்களுக்கு இறுதி கட்ட கலந்தாய்வு வரும் 22ம் தேதி நடக்கிறது.புதுச்சேரி சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன் சர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் முதுநிலை மருத்துவ படிப்பிற்கான இடங்கள் சென்டாக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. ஏற்கனவே மூன்று கட்ட கலந்தாய்வு முடிந்த நிலையில் காலியாக உள்ள இடங்களின் பட்டியல் சென்டாக் இணையதளத்தில் www.centacpuduhcerry.inவெளியிடப்பட்டுள்ளது.இந்நிலையில் அரசு, நிர்வாக ஒதுக்கீட்டில் காலியாக உள்ள இடங்களுக்கு இறுதிகட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது. கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் வரும் 22ம் தேதி மாலை 5:00 மணிக்குள் தங்களது விருப்பங்களை பதிவு செய்து, கல்விக் கட்டணத்தை செலுத்த வேண்டும். கல்விக்கட்டணம் தொடர்பான கூடுதல் விவரங்களை இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.