உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  10 நாள் ஒரு வேளை நீர் அருந்தி நோன்பு இருந்த ஜெயினர்கள்

 10 நாள் ஒரு வேளை நீர் அருந்தி நோன்பு இருந்த ஜெயினர்கள்

பத்து நாட்கள் உணவின்றி ஒரே வேளை கிணற்று நீர் மட்டும் அருந்தி உண்ணா நோன்பை நிறைவு செய்த ஜெயினர்களை சாரட் வண்டியில் ஊர்வலமாக அழைத்து சென்றனர். விநாயகர் சதுர்த்தி முடிந்தவுடன், ஜெயின் மத திகம்பர் பிரிவினர் முக்கிய ஆன்மிக விழாவாக (பர்யுஷன்) அனந்த நோன்பை கடைபிடிக்கின்றனர். இந்த நோன்பை மேற்கொள்ளும் ஆண்களும், பெண்களும் பத்து நாட்களுக்கு எவ்வித உணவையும் சாப்பிடாமல் வெறும் ஒரே வேளை நீர் மட்டுமே அருந்தி உண்ணா நோன்பை கடைப்பிடிப்பர். இந்நிலையில், இந்த ஆண்டு புதுச்சேரியில் இளம் பெண்கள் ஜூகி, நேகா, ஸ்ரேயா, மற்றும் விபின், சுருதி, சஞ்சய், கவிதா, ரமேஷ், ப்ரீத்திக் சுனில், உள்ளிட்ட 9 பேர் பத்து நாட்கள் அனந்த நோன்பை கடைப்பிடித்தனர். இவர்கள் நோன்பு காலத்தில் எந்த உணவு சாப்பிடாமல், புதுச்சேரி பாரதி வீதியில் உள்ள ஜெயின் கோவில் கிணற்றிலிருந்து எடுக்கப்பட்டு வழங்கப்படும் நீரை ஒரு வேளை அருந்தி 10 நாட்கள் உண்ணா நோன்பு இருந்தனர். நேற்று நோன்பு முடிந்து அனைவரும் புதுச்சேரி சாரம் பாலாஜி, நகரில் உள்ள ஜெயின் மண்டபத்திலிருந்து குதிரைகள் பொருத்திய சாரட் வண்டியில் பேண்ட் வாத்தியங்கள் முழங்க பாரதி வீதி, செட்டி தெரு, வள்ளலார் சாலையில் உள்ள ஆகிய 3 ஜெயின் கோவில்களுக்கும் அழைத்து சென்று அனந்த நோன்பை நிறைவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

A P
அக் 01, 2026 22:09

பக்கத்தில் மனைவிகளுடன், அரை மணி நேரம் உண்ணாநோன்பு இருந்துவிட்டு, தம்பட்டம் அடித்துக்கொண்ட பன்னாடையானவர் , இந்த இளம் ஜெயினர்களின் கால் தூசிக்கு சமம் ஆக மாட்டார். வேஷம் போட்ட கொள்ளைக்காரர். அந்த கொள்ளைக்காரர் கட்சிக்கு ஒட்டு போட்டவர் எல்லாம் திருடர்கள்தான்.


Rajesh Krishna
செப் 28, 2026 09:08

சிறப்பு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை