மேலும் செய்திகள்
யோகவிநாயகர் கோவிலில் 10ம் தேதி கும்பாபிஷேகம்
07-Feb-2025
நெட்டப்பாக்கம்: கரியமாணிக்கம் வலம்புரி யோக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. நெட்டப்பாக்கம் அடுத்த கரியமாணிக்கம் வெங்கடசுப்பா ரெட்டியார் நகர் ஸ்ரீ வலம்புரி யோக விநாயகர், தட்சணாமூர்த்தி, துர்கையம்மன் கோவில்கள் புதியதாக கட்டிமுடிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. நேற்று காலை 5:00 மணிக்கு கோ பூஜை, நான்காம் காலம் யாக பூஜை நடந்தது. 10:00 மணிக்கு கடம் புறப்பாடும், 10.30 மணிக்கு வலம்புரி யோக விநாயகர் மற்றும் பரிவார தேவதைகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில், துணை சபாநாயகர் ராஜவேலு, லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., மற்றும் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
07-Feb-2025