உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதிதாக அமைக்கப்பட்ட சிமென்ட் சாலை திறப்பு

புதிதாக அமைக்கப்பட்ட சிமென்ட் சாலை திறப்பு

புதுச்சேரி : முத்தியால்பேட்டை, ரங்க விநாயகர் கோவில் வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட சிமென்ட் சாலையை பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார். முத்தியால்பேட்டை தொகுதி ரங்கவிலாஸ் தோட்டம், ரங்க விநாயகர் வீதியில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி துவங்கப்பட்டது.பணிகள் முடிவடைந்து, மக்கள் பயன்பாட்டிற்கான பிரகாஷ் குமார் எம்.எல்.ஏ., நேற்று சாலையை திறந்து வைத்தார். மேலும், அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, புதியதாக குடிநீர் குழாய் மற்றும் 4 பாதாள கழிவுநீர் தொட்டி அமைத்து தரப்பட்டது.இதையொட்டி, எம்.எல்.ஏ.,க்கு நன்றி தெரிவிக்கும் வகையில். அப்பகுதி மக்கள் ரங்க விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து, எம்.எல்.ஏ.,வுக்கு வெள்ளி வேல் பரிசாக வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை