உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு பணிகளுக்கு ஒரே போட்டி தேர்வு துறை தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம்

அரசு பணிகளுக்கு ஒரே போட்டி தேர்வு துறை தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம்

புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு பணிகளுக்கு ஒரே போட்டி தேர்வு நடத்துவது தொடர்பான அனைத்து துறை தலைவர்கள் கருத்து கேட்பு ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. புதுச்சேரி அரசு பல்வேறு துறைகளில் உள்ள குரூப்-சி மற்றும் குரூப்-பி பணியிடங்களை நிரப்புவதற்கான நேரடி ஆட்சேர்ப்பு தேர்வை பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையின் தேர்வு பிரிவு நடத்தி வருகிறது. இதற்கான அறிவிப்புகளை சம்மந்தப்பட்ட துறைகள் வெளியிடுகின்றன.இது குறுகிய இடைவெளியில் பல தேர்வுகளுக்கு வழி வகுக்கிறது. சில சமயங்களில் அடிப்படை தகுதிகள் ஒரே மாதிரியாக காணப்பட்டாலும், தனித்தனி தேர்வுகள்நடத்தப்பட்டு, விண்ணப்பதாரர்களுக்கு தேவையற்ற மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அதனால், குரூப்-சி மற்றும் குரூப்-பி பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு தேர்வின் செயல்முறையை முறைப்படுத்த, கல்வித்தகுதி அடிப்படையில் பொது ஆட்சேர்ப்பு தேர்வு நடத்த உத்தேசிக்கப் பட்டது. இது குறித்து வரைவு திட்டம் தயாரிப்பு தொடர்பான அனைத்து துறை தலைவர்கள் கருத்து கேட்பு கூட்டம் தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தேர்வுக் கட்டுப்பாட்டாளரான அரசு செயலர் பங்கஜ்குமார் ஜா தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த அரசு செயலர்கள், துறை தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், பொது ஆட்சேர்ப்பு தேர்வு வரைவு திட்டம் குறித்து பல்வேறு ஆலோசனைகள் பெறப்பட்டன. அதன்படி, வரைவு திட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்யப்பட்டு, அரசுக்கு பரிந்துரை செய்து, அதனை அரசாணையாக வெளியிட்டபின், வரும் நிதி ஆண்டில் இருந்து பொது ஆட்சேர்ப்பு முறையை அமல்படுத்தவது என முடிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை