மேலும் செய்திகள்
டில்லி முழுதும் பலத்த பாதுகாப்பு
09-May-2025
புதுச்சேரியில் அதிகரித்து வரும் குற்றங்களை தடுக்கும் பொருட்டு உயர் அதிகாரி ஒருவர் இரவில், நள்ளிரவில் தன்னந்தனியாக, சீருடையின்றி, நகர் வலம் செல்கிறார். அப்போது, வழியில் ஏதேனும் பிரச்னை இருந்தால், உடன் சம்மந்தப்பட்ட ஸ்டேஷன் பொறுப்பு அதிகாரியை போனில் அழைத்து காய்ச்சி எடுத்து விடுகிறார்.இதனால், போலீஸ் நிலைய பொறுப்பு அதிகாரிகள் எந்த நேரத்தில், உயர் அதிகாரியிடம் இருந்து போன் அழைப்பு வருமோ என கலக்கத்தில், துாக்கத்தை தொலைத்து தவித்துக் கொண்டுள்ளனர்.நிலைமையை சமாளிக்க, போலீஸ் நிலைய பொறுப்பு அதிகாரிகள், இரவு ரோந்தை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும், குற்றவாளிகளை கண்காணிப்பது போல், நள்ளிரவில் நகர்வலம் செல்லும் உயர் அதிகாரியை ரகசியமாக கண்காணிக்க துவங்கியுள்ளனர்.
09-May-2025