உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கல்லுாரி வகுப்பறை கட்டடம் முதல்வர் திறந்து வைத்தார்

கல்லுாரி வகுப்பறை கட்டடம் முதல்வர் திறந்து வைத்தார்

அரியாங்குப்பம் : தவளக்குப்பம் ராஜிவ் காந்தி கலைக் கல்லுாரியில் 54.74 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்ட வகுப்பறை கட்டடத்தை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்.கல்லுாரி வகுப்பறைகள், அலுவலகம், பல்நோக்கு கருத்தரங்க கூடம், நுாலகம் ஆகியவற்றை புனரமைக்க தேசிய உயர்கல்வி திட்ட நிதியின் மூலம், ரூ.54.74 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. புனரமைக்கப்பட்ட கட்டடத்தை, முதல்வர் ரங்கசாமி நேற்று திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். செந்தமிழ்க்கோ வரவேற்றார்.சபாநாயகர் செல்வம் தலைமை தாங்கினார். உயர்கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் ஹென்னா மோனிஷா நோக்கவுரை ஆற்றினார். பேராசிரியர் ரேவதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில், உயர்கல்வித் திட்ட செயலாளர் கிருஷ்ணமோகன் உப்பு, துறை இயக்குநர் அமன் ஷர்மா, திட்ட ஒருங்கிணைப்பாளர் அசோக், பேராசிரியர்கள் உமா, கல்லுாரி மாணவர்கள், அலுவலக ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.வணிகவியல் துறைத் தலைவர் ஜீவலட்சுமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை