உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வேலை நிறுத்த போராட்டம் துவங்கியது

வேலை நிறுத்த போராட்டம் துவங்கியது

புதுச்சேரி: பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று துவங்கினர்.புதுச்சேரி அரசு பணியாளர்கள் நல கூட்டமைப்பு சார்பில் பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்களுக்கு ரூ.18 ஆயிரம் ஊதியம் வழங்ககோரி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்திவருகின்றனர். இந்நிலையில், அதற்கான அரசாணை வெளியிடாததை கண்டித்து, கூட்டமைப்பு தலைவர் சரவணன் தலைமையில் பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று துவங்கினர்.இதனால் மாநில முழுதும் குடிநீர் வினியோகம், சாலை சீரமைப்பு, வாய்க்கால்கள் துார்வாரும் பணி உள்ளிட்டவை பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ